செவ்வாய், 18 ஏப்ரல், 2017

திருமோகூர்

தொழில் மேன்மை பெற – திருமோகூர். இங்கு கருணைக் கடலாக காளமேகப் பெருமாள் காட்சி தருகிறார். திருப்பாற்கடலில் கடைந்தெடுத் அமுத்த்தை தேவர்களுக்கு திருமால் வழங்கிய இடம் தான் திருமோகூர். கோயிலின் தென் மேற்குப் பகுதியில் (கன்னி மூலையில்) சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது. திருமோகூர் என்றாலே நம் நினைவுக்கு வருவது திருவாழி ஆழ்வான் தஎனும் அற்புதப்பெருமான் சக்கரத்தாழ்வாரே ஆவார். முன்புறம் சக்கரத்தாழ்வாராகவும் பின்புறம் யோக நரசிங்கப் பெருமாளாகவும் காட்சி தரும் திருக்கோலம் காண்போரை மெய் சிலிர்க்க வைக்கிறது. நாற்பத்தெட்டு தேவதைகள் சுற்றிலும் இருக்க, ஆறு வட்டங்களுக்குள் நூற்று ஐம்பத்து நான்கு எழுத்துகள் பொறித்திருக்க, பதினாறு திருக்கரங்களிலும் பதினாறு படைக் கலன்கள் ஏந்தி, மூன்று கண்களுடன் காட்சியளிக்கிறார். திருமுடி தீப்பரப்பி, நாற்புறமும் விரவி ஒளிர்கிறது. நரசிங்கப் பெருமாள் நான்குவித சக்ராயுதங்களை ஏந்தி, இப்பெருமாளை ஆறு முறையோ, ஆறின் மடங்குகளிலோ வலம் வந்தால் எண்ணிய செயல்கள் சட்டென்று நிறைவேறுகின்றன. மரண பயம் அறுத்தும், மனோவியாதியை ஒழித்தும், கன்னியருக்குக் கல்யாண மாலை கொடுத்தும், காளையருக்கு வேலை கொடுத்தும், மக்கட்பேறை மட்டிலாது அளித்தும், தொழில் தோல்வியை நீக்கியும் கண் கண்ட தெய்வமாக நரசிம்ம – சுதர்சனப்பெருமாள் அருளாட்சி நடத்துகிறார். இருப்பிடம்: மதுரைக்கு அருகில் உள்ளது திருமோகூர் திருத்தலம்.

0 Post a Comment:

கருத்துரையிடுக