செவ்வாய், 18 ஏப்ரல், 2017

திருவிடைமருதூர்.

பிரம்மஹத்தி தோசம் நீங்க – திருவிடைமருதூர். வெவ்வேறு காலங்களில் வாழ்ந்த வீரசேனன் என்ற சிற்றரசனுக்கு வரகுண பாண்டியனுக்கும் அறியாமலேயே பிராமணனைக் கொன்றதால், பிரம்மஹத்தி தோசம் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் சுய நினைவு இழந்து மன நலம் குன்றி மயங்கி நின்றனர். பல்வேறு ஆலயங்கள் சென்றும், இத்துன்பங்களிலிருந்து விடுபடவில்லை. இறுதியாகத் திருவிடைமருதூர் ஸ்தலம் வந்து, மகாலிங்க சுவாமியை வழிபட்டதினால் விடுபட்டனர். திருவிடை மருதூர் ஆலயத்தில் தோரண வாயிலின் தெற்குப்புறம் சிறிய படிக்கட்டு உள்ளது. அங்கே தேவதை போன்ற உருவம் ஒன்று தென்புறச் சுவரில் உள்ள துளை வழியாகத் தலைவிரி கோலமாக அமர்ந்து முழங்கால் மேல் முகத்தை வைத்துக் கொண்டு , காத்திருப்பது தான் பிரம்மஹெத்தி. பிரம்மஹத்தி மேடையில் உப்பு மிளகு எடுத்து பாதத்தில் போட்டு விட்டு அர்ச்சனை செய்து விட்டுத் திரும்பிப் பார்க்காமல்,மகாலிங்க சுவாமி சன்னதி சென்று,நெய் தீபம் ஏற்றி குடும்பத்தினர் அனைவருக்கும் அர்ச்சனை செய்து விட்டு, திரும்பிப் பார்க்காமல், அம்மன் சன்னதி வழியே வெளியில் செல்ல வேண்டும். மாலை 6 மணி வரை உப்பு சம்பந்தப்பட்ட உணவு சாபிடக் கூடாது. காற்று,உப்பு,நீர் இவற்றின் தன்மைகளை உள் வாங்கும் உப்பு மிளகு காணிக்கையாக்குவதன் மூலம் ஜாதகத்தில் பிரம்மஹத்தி தோசம் உட்பட, அறியாமலேயே ஏற்பட்ட தோசங்கள் பிரம்மஹெத்தியிடம் போய் சேர்கின்றன. கடுமையான பிரம்மஹத்தி தோசத்திற்கு தேவஸ்தான அலுவலகத்தில் ரூ. 500/- செலுத்தி முறையாகப் பரிகாரங்களும் சாதாரண பிரம்மஹத்தி தோசத்திற்கு ரூ 50/- செலுத்தி, எளிய முறையில் பரிகாரங்களும் காலை 7 மணி முதல் 11 மணீக்குள் செய்து கொள்ள வேண்டும். ஆலயத்திறப்பு நேரம்: காலை 5.00 மணி முதல் பகல் 12.30 மணி .மாலை 4.00 மணி முதல் இரவு 9.30 மணி. வழித்தடம்: கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் 20கி.மீ. தொலைவில் உள்ளது.

0 Post a Comment:

கருத்துரையிடுக