வெள்ளி, 25 ஜூன், 2021

திருவெண்காடு


திருவெண்காடு
பூர்வ ஜென்ம கர்ம தோஷம்

இந்த தோஷமானது பித்ருக்கள் என்னும் முன்னோர்கள் சாபம் நாக சாபம், பத்தினி சாபம், கோ சாபம் போன்ற வழிகளிலும் நம்மை வந்தடைகிறது. ஜாதகத்தில் மறைமுகமாகவும் இருக்கும். 

ஜோதிடப்படி 5ம் இடம் பூரிவீக ஜெனனத்தையும், 9ம் இடம் அடுத்து வரும் ஜெனனத்தையும் லக்னம் தற்போதைய ஜெனனத்தையும் குறிக்கும். எனவே தான் 1,5,9 ம் இடங்கள் திரிகோணங்களாகும். 

பொதுவாக 6ம் இடம் என்பது நோய், வழக்கு, எதிரி,கடன் போன்றவற்றை குறிக்கும். எனவே ஆறமிடம் வலுக்கக் கூடாது என்பார்கள். 

6ம் இடம் என்பது 9ம் இடத்துக்கு 10ம் இடம். அதாவது தகப்பனார் ஸ்தானத்துக்கு 10ம் இடம். 

தகப்பனார் செய்த கர்மத்தின் விளைவே நாம் அதை அனுபவிக்கவே பிறந்து உள்ளோம். 

அந்த தகப்பனார் ஸ்தானத்துக்கு 5ம் இடம் இலக்கனம். 
 இந்த தோஷமானது 5ம் இடம் 5மிடத்து அதிபதியின் நிலையை கொண்டு ஏற்படுவதாகும். 

5ம் இடத்தில் சனி, ராகு, கேது சேர்க்கை, 5க்குடையோர் மறைவு நீசம், போன்ற நிலைகளால் அறிந்து கொள்ளலாம். 
இதில் ராகு,கேதுவுக்கு முக்கியத்துவம். 

இவர்கள் பூர்வஜென்பத்திற்கேற்ப தண்டனைகளை நமக்கு அளிப்பவர்கள். பூர்வீகத்தில் வில்லங்கம், தொழிலில் சரிவு மனக்கோளாறு, திருமணம் நடக்காமல் போவது, நடந்தாலும் நல்லபடியாக இருக்காது. அவமானம் என எல்லா பக்கங்களிலிருந்தும், கல்லடி பட்டுக் கொண்டே இருக்கும். 

உண்மையிலேயே இந்த தோஷத்திலிருந்து விடுபட வேண்டும். நல்ல சூழ்நிலை நிலவ வேண்டுமெனில் சீர்காழி அருலிலுள்ள திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் தான் தர்ப்பணம் திதி போன்றவை செய்ய வேண்டும். இதுவே நாடி ஜோதிடத்தில் குறிப்பிட்டுள்ள முக்கியமான இடமாகும். ஜாதகத்திலுள்ள பூர்வ ஜென்ம கர்ம தோஷத்திற்கு திருவெண்காட்டில் திதி செய்து நல்வாழ்வு பெறலாம்.

Related Posts:

  • Read More
  • BUDHA BAHAVAAN ( புத பகவான்)திருவெண்காடு - (மயிலாடுதுறை மாவட்டம் மாவட்டம்)ஸ்வேதாரண்யேஸ்வரர்  திருக்கோயில் மிகவும் பிரிசித்தி பெற்ற திருத்தலமாக விளங்குகிறது. கல்விக்கும், தொழிலுக்கும் அதிபதியாக இருக்கும் புதபகவானுக்கு, இத்தலத்தில் தனி ஆலயம… Read More
  • Sooriyanar TempleSooriyanar TempleSooriyanar Temple is near Kumbakonam, approachable by Kumbakonam - Mayiladuthurai road. It is around 2 km to the north of Aduthurai and the temple is well connected from lower Anicut and Thiruppanandal. Actua… Read More
  • Thenkudi Thittai Temple Thittai is a tiny hamlet in Tanjore district. There is a temple dedicated to Guru Bhagwan , one of the planets in the Navagrahas. Though the presiding deity is Vasishteswarar, yet many devotees flock to this temple to propit… Read More
  • திருவெண்காடுதிருவெண்காடு – பூர்வ ஜென்ம கர்ம தோஷம். இந்த தோஷமானது பித்ருக்கள் என்னும் முன்னோர்கள் சாபம் நாக சாபம், பத்தினி சாபம், கோ சாபம் போன்ற வழிகளிலும் நம்மை வந்தடைகிறது. ஜாதகத்தில் மறைமுகமாகவும் இருக்கும். ஜோதிடப்படி 5ம் இ… Read More

0 Post a Comment:

கருத்துரையிடுக